இந்தியாவில் தோன்றிய அபூர்வ முழு சந்திர கிரகணம்

0
28

இந்தியாவில் தோன்றிய அபூர்வ சந்திர கிரகணத்தை மொட்டைமாடிகளில் நின்று மக்கள் ரசித்து வருகின்றனர். 152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் இன்று அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியுள்ளது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திர கிரகணத்தை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.
மூன்று அரிய நிகழ்வுகள்

சந்திர கிரகணம், சூப்பர் நிலா, சிவப்பு நிலா என்ற மூன்று அரிய நிகழ்வுகளுடன் இந்த அபூர்வ சந்திர கிரகணம் நடைபெறுகிறது. மாலை 5.18 மணி முதல் 6.21 மணி வரை இந்த சந்திர கிரகணம் நடைபெறும்.

பெரிய பிரகாசமான நிலா

இன்று சூப்பர் மூன் என்பதால் வழக்கமான பவுர்ணமி நாட்களை விட இன்று நிலவு 14 சதவீதம் பெரியதாக தோன்றும். அதேபோல் வழக்கத்தை விட 30 சதவீதம் பிரகாசமாகவும் நிலவு காட்சியளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here