கட்சி தொடங்குவது உறுதி-நான்தான் முதல்வர் என்பது இல்லை…

0
23

சென்னை: தான் அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலை சந்தித்தால் நான்தான் முதல்வர் என்பதில்லை. ஊழல் கரை படியாத யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்தார். நியூஸ் 18 தமிழ் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரனுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி: நான் அரசியலில் எப்போது ஈடுபடுவேன் என்பது குறித்து ஊடகங்கள்தான் தேதி குறித்து வருகின்றன. நான் இன்னும் குறிக்கவில்லை.தலைப்புச் செய்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தேதி கேட்கின்றனர். அதற்கு பயந்தோ அல்லது இணங்கியோ என்னால் தேதி குறிப்பிட முடியாது. செல்லும் பாதை முக்கியமான ஒரு பயணம். அதற்கான திட்டங்களும், முன்னேற்பாடுகளும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள், நண்பர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே தெரிவிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here