சென்னை : சினிமா நடிகைகளில் பலருக்கு நடிக்க வருவதற்கு முன்பு பல்வேறு கனவுகள் இருந்திருக்கும். சிலர், சினிமாவில் மார்க்கெட் போன பின்பு அவர்கள் கனவு கண்ட துறையைத் தேர்ந்தெடுப்பார்கள். குடும்ப சூழலாலும், வெவ்வேறு காரணங்களாலும் தங்களது கனவை நோக்கிப் பயணப்படாத பலர் சினிமாவிலும் உண்டு. நடிகை காஜல் அகர்வால் சிறு வயது முதலே கனவாகக் கொண்டிருந்த விஷயத்தை தற்போது தெரிவித்துள்ளார்.
லட்சியம் சினிமாவில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவருக்குமே அவர்களது லட்சியம் சினிமாதான் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை, வெவ்வேறான கனவுகள் சிறுவயதில் இருந்திருக்கும்.
கனவு சிலர் மிகவும் விரும்பியே சினிமாவுக்கு வந்திருப்பார்கள். இன்னும் சிலரோ, வேறு துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சூழல்களால் சினிமாவுக்கு வந்திருப்பார்கள். அவர்களுக்கும் கூட சினிமாவில் இருந்து விலகிய பிறகு தான் நினைத்த துறையில் சாதிக்க வேண்டும் எனும் வெறி இருக்கும்.