தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

0
28

பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை. இந்த இலைகளைக் கொண்டு பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும். பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

ஏனெனில் வேப்பிலையில் நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய வேப்பிலை கசப்பாக இருக்கும். பொதுவாக இனிப்பாக வாய்க்கு சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களை விட கசப்பாக இருக்கும் உணவுப் பொருட்கள் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும். அதிலும் ஒருவர் கசப்பான வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காணலாம். இங்கு அதிகாலையில் வேப்பிலையையோ அல்லது வேப்பிலை நீரையோ வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வேப்பிலை மிகவும் சிறப்பான பொருள். இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கும். இல்லாவிட்டால், 2 டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 7 வேப்பிலைகளைப் போட்டு பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குளிர வைத்து, காலை, மதியம் மற்றும் மாலையில் குடிப்பதன் மூலமும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here