என்னது கொல்கத்தா அணியிலிருந்து கம்பீர் அவராகவே விலகினாரா ?

0
21

கோல்கத்தா: ஐபிஎல் 11வது சீசன் ஏலத்தின் போது, கேப்டன் கவுதம் கம்பீரை கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுக்காதது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாட உள்ள கம்பீர்தான், தன்னை ஏலம் எடுக்க வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளாக கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர் கவுதம் கம்பீர். அந்த அணிக்காக 122 போட்டிகளில், 3,345 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று தந்தவர்.

11வது சீசனுக்கான ஏலத்தின்போது, அவரை கோல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்க வைக்கவில்லை. ஏலத்தின்போது, தங்களுக்கு உள்ள உரிமையின் அடிப்படையிலும் அவரை ஏலம் எடுக்கவில்லை. முதல் நாளில் ஏலம் எடுக்கப்படாத கம்பீரை, டெல்லி டேர்டெவில்ஸ், ரூ2.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த சீசனில் தன்னை ஏலம் எடுக்க வேண்டாம் என்று கம்பீர் கேட்டுக் கொண்டார். அதனால்தான் அவரை ஏலம் எடுக்கவில்லை என்று கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சி.இ.ஓ., வெங்கி மைசூர் கூறியுள்ளார். ஆனால், அதற்கான காரணம் தெரியவில்லை. என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here