சசிகலா கோரிக்கைகளை ஏற்ற ஆறுமுகசாமி கமிஷன்…

0
24

சென்னை: சசிகலா கோரியபடி அவருக்கு எதிராக புகார் கொடுத்தவர்களின் விவரங்களை அளிக்கவும், சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யவும் ஆறுமுகசாமி கமிஷன் ஏற்றுக் கொண்டது. ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here