அம்மாடி, ஒரு வழியாக சிவாவை கைவிடும் அஜீத்

0
18

சென்னை: அஜீத் விசுவாசத்தை அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கப் போவது இல்லை என்று கூறப்படுகிறது. வீரம், வேதாளம் ஆகிய படங்களை அடுத்து அஜீத், இயக்குனர் சிவா மீண்டும் கூட்டணி சேர்ந்த படம் விவேகம். விவேகம் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. தல ரசிகர்களாலேயே படத்தை பார்த்துவிட்டு இது என்ன மொக்கையாக இருக்கு என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

விவகேம் படத்தை பார்த்த ரசிகர்கள் கடவுளே அடுத்த படத்தில் அஜீத் சிவாவுடன் மட்டும் சேரவே கூடாது என்று பிரார்த்தனை செய்தனர். ஆனால் அவர்கள் எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அதுவே நடந்துவிட்டது.

சிவா விவேகம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கிறார் அஜீத். வேண்டாம் தல, சிவாவை விட்டுடுங்க தல என்று ரசிகர்கள் கதறியது அஜீத் காதில் விழவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here