பாவம் பன்னீரு, உள்ளுக்குள்ளே வடிப்பார் போல கண்ணீரு: டி. ராஜேந்தர்

0
23

சென்னை: பாவம் முதல்வர் பன்னீரு, உள்ளுக்குள்ளே வடிப்பார் போல் இருக்கிறது கண்ணீரு. சிலர் அவருக்கு ஏற்படுத்த நினைக்கிறார்கள் கெட்ட பெயரு என இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த அறவழிப் போராட்டத்தை கண்டு உடனே அடித்துப் பிடித்து டெல்லிக்கு சென்று மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களை சந்தித்து அவசரம் அவசரமாக அவசர சட்டத்தை இயற்றி அதை சட்டசபையிலும் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க முற்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலான மாநில அரசுக்கும், அதற்கு உறுதுணையாக பக்கபலமாக நின்று ஒத்துழைத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here